15ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) வேட்பாளர் தாப்பா நாடாளுமன்ற வேட்பாளர் டத்தோஸ்ரீ எம். சரவணன் 5,064 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
சரவணன் 18,398 வாக்குகள் பெற்று பக்காத்தான் ஹரப்பான் (PH) வேட்பாளர் சரஸ்வதி கந்தசாமியை தோற்கடித்தார்.
14 ஆவது பொதுத் தேர்தலில், பாரிசான் நேஷனல் (BN) பிரதிநிதி சரவணன் 614 வாக்குகள் பெரும்பான்மையுடன் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார், அந்த நேரத்தில் PKR சின்னத்தைப் பயன்படுத்தி போட்டியிட்ட PAS மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர்களை தோற்கடித்தார்.
Discussion about this post